Sketchstory No. 15 - 'உறவுகள் தொடர்கதை' / 'Born in our hearts' by Srividya
கௌதம் தன் அறையில், அவனுடைய அம்மாவின் பாதி முகம் மட்டுமே வரையப்பட்ட ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். “கௌதம்! காலேஜுக்கு நேரமாச்சு. கெளம்பல?” என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் வந்தனா. சற்று நிதானித்துக்கொண்டு அவனருகில் வந்து அவன் வலக்கையை மெதுவாகப்பற்றித் தன் உள்ளங்கைக்குள் வைத்தாள். அப்போதுதான் அவன் அருகில் நின்ற அம்மாவைக் கவனித்தான். “இதை எப்போமா நான் முழுசா முடிப்பேன்? இல்ல அதுக்கு வாய்ப்பே இல்லையா?” என்று அவன் கேட்க, வந்தனா நினைவுப்பாதையில் 10 வருடங்கள் பின்னோக்கிப் பயணித்தாள். அன்று மே 25ஆம் நாள், அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் குறைந்திருந்தது. வழக்கத்தைவிட சீக்கிரமாக எழுந்து, குளித்துவிட்டு எளிமையான சமையல் செய்து முடித்தாள் வந்தனா. அவளுடைய மனம் நூலறுந்த காற்றாடி போல் எங்கெங்கோ அலைந்துகொண்டிருந்தது. அவளும் அவள் கணவன் ரகுவும் அன்று ஆஃபீஸுக்கு லீவ் சொல்லியிருந்தார்கள். தாத்தா பாட்டியின் அறையிலிருந்து வெளிப்பட்ட 10 வயது கௌதம், தூக்கம் கலைந்து, ஓடிவந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். “குட் மார்னிங் கண்ணா! போய் பல் தேய்ச்சுட்டு குளிச்சுட்டு வா. உனக்குப் புடிச்ச அவல் உப...
Comments
Post a Comment