Sketchstory No. 15 - 'உறவுகள் தொடர்கதை' / 'Born in our hearts' by Srividya
கௌதம் தன் அறையில், அவனுடைய அம்மாவின் பாதி முகம் மட்டுமே வரையப்பட்ட ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“கௌதம்! காலேஜுக்கு நேரமாச்சு. கெளம்பல?” என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் வந்தனா. சற்று நிதானித்துக்கொண்டு அவனருகில் வந்து அவன் வலக்கையை மெதுவாகப்பற்றித் தன் உள்ளங்கைக்குள் வைத்தாள். அப்போதுதான் அவன் அருகில் நின்ற அம்மாவைக் கவனித்தான். “இதை எப்போமா நான் முழுசா முடிப்பேன்? இல்ல அதுக்கு வாய்ப்பே இல்லையா?” என்று அவன் கேட்க, வந்தனா நினைவுப்பாதையில் 10 வருடங்கள் பின்னோக்கிப் பயணித்தாள்.
அன்று மே 25ஆம் நாள், அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் குறைந்திருந்தது. வழக்கத்தைவிட சீக்கிரமாக எழுந்து, குளித்துவிட்டு எளிமையான சமையல் செய்து முடித்தாள் வந்தனா. அவளுடைய மனம் நூலறுந்த காற்றாடி போல் எங்கெங்கோ அலைந்துகொண்டிருந்தது. அவளும் அவள் கணவன் ரகுவும் அன்று ஆஃபீஸுக்கு லீவ் சொல்லியிருந்தார்கள். தாத்தா பாட்டியின் அறையிலிருந்து வெளிப்பட்ட 10 வயது கௌதம், தூக்கம் கலைந்து, ஓடிவந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். “குட் மார்னிங் கண்ணா! போய் பல் தேய்ச்சுட்டு குளிச்சுட்டு வா. உனக்குப் புடிச்ச அவல் உப்புமா பண்ணியிருக்கேன்!” என்றாள் வந்தனா. “வீக் டேலயா?” என்று ஆச்சரியமும் குறும்பும் கலந்த கேள்வியுடன் தன் அறைக்குள் சென்றான் கௌதம். “சரி, நானும் அம்மாவும் கோவிலுக்கு போய்ட்டு அப்படியே சித்தப்பா வீட்டுக்குப் போறோம். நீங்க குழந்தைக்கிட்ட பேசிட்டு ஃபோன் பண்ணுங்க. அப்புறம் கிளம்பி வரோம்” என்று சொல்லிவிட்டு மனைவியுடன் கிளம்பினார் வந்தனாவின் அப்பா. அவரிடம் குடையைக் கொடுத்து கனிவான பார்வையால் விடை கொடுத்தான் ரகு.
குளித்துவிட்டு நேராக தாத்தாவின் அறைக்குச் சென்ற கௌதமின் விழிகள் அவரைத் தேடின. “தாத்தா பாட்டி கோவிலுக்கு போயிருக்கா, வா சாப்பிடலாம்”, என்று அவனை டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றான் ரகு. அவல் உப்புமாவை இருவருக்கும் கொடுத்துவிட்டு எதிரே இருந்த மோடாவில் அமர்ந்தாள் வந்தனா. அவள் விழிகளுக்குக் கண்ணீர் திரை போட்டுக்கொண்டிருந்தது. சற்றும் சுற்றி வளைக்காமல் ரகு கௌதமிடம்,
“கண்ணா, அடாப்ஷன் பத்தி நீ என்ன நினைக்கற?” என்று கேட்டான். குழந்தை புருவங்களைக் குறுக்கி சில நொடிகள் யோசித்து, “எவ்வளவோ பசங்க வீடு இல்லாம, சாப்பாடு இல்லாம, யாரும் இல்லாம கஷ்டப்படறாங்க. பாவம்பா! நாம அடாப்ட் பண்ண போறோமாப்பா?!” என்று உற்சாகத்துடன் கேட்டான். வந்தனாவோ எல்லையைக் கடக்கத் துடித்த கண்ணீருடன் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தாள். “இங்க வந்து என் மடியில உக்காந்துக்கோ” என்றவுடன், குதூகலத்துடன் ரகுவின் மடியில் அமர்ந்தான் கௌதம்.
அவனை மென்மையாக அணைத்துக்கொண்டு “நீ பொறந்து ஒரு வாரக் குழந்தையா நாங்க உன்ன ஹாஸ்பிடல்லேந்து ஆத்துக்கு எடுத்துண்டு வந்தோம்” என்று ரகு சொல்ல ஆயிரமாயிரம் கேள்விக்குறிகளுடன் அம்மாவைப் பார்த்தான் கௌதம். கண்ணீருடன் நடத்திய யுத்தத்தில் எப்போதோ தோற்றுவிட்ட வந்தனாவின் கண்களில் அருவி பெருக்கெடுத்தது. “நீ பிறந்தவுடன் உன் பயலாஜிகல் மதர், அடாப்ஷன் ஏஜன்சியிடம் உன்னைக் கொடுத்துட்டு, ரொம்ப வருத்தத்தோட போய்ட்டாங்க. உன் அம்மாவும் நானும் ஒரு குழந்தையையாவது அடாப்ட் பண்ணனும்னு கல்யாணம் ஆன உடனேயே முடிவு பண்ணினதால அந்த ஏஜன்சில ரெஜிஸ்டர் செஞ்சிருந்தோம். அதனால அவங்க எங்களுக்கு ஃபோன் பண்ணி உன்ன பத்திச் சொல்லி, “வந்து பாத்து செலக்ட் பண்ணறீங்களா?”ன்னு கேட்டாங்க. அம்மா உடனே “பார்க்க என்ன இருக்கு? இது எங்க குழந்தை. குழந்தைதான் எங்கள செலக்ட் பண்ணியிருக்கான். உடனே வரோம். எப்போ குழந்தைய வீட்டுக்குக் கூட்டிவரலாம்?”ன்னு கேட்டா. அப்புறம் ஒரு வாரத்துல நீ வீட்டுக்கு வந்துட்ட” என்று கூறி கௌதமை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ரகு.
கௌதம் அப்பாவின் அணைப்பை மெதுவாகத் தளர்த்தி அம்மாவிடம் சென்று, மடியில் உட்கார்ந்து அவளுடைய கன்னத்தைத் தொட்டு, “ஏம்மா அந்த அம்மா என்ன விட்டுட்டுப் போய்ட்டா?” என்று கேட்டான். அவன் கண்ணீரைத் தன் துப்பட்டாவால் துடைத்து “இல்லடா கண்ணா! அவங்க நிலமை அப்படி. உனக்காவது நல்ல வாழ்க்கை அமையட்டுமேன்னு அப்படி செஞ்சாங்க” என்று தழுதழுத்தக் குரலில் வந்தனா அவனுக்குச் சமாதானம் சொன்னாள்.
சமீபமாக நடந்த சில நிகழ்வுகளால் கௌதமிற்கு அவனைப்பற்றிய உண்மை தெரிய இது நல்ல சமயம் என்று சில மாதங்களாகச் சிந்தித்து வந்தனாவும் ரகுவும் இந்த முடிவை எடுத்திருந்தார்கள். அன்று முழுதும் கௌதம் பல கேள்விகளை எழுப்பினான். “அம்மா! நீ சும்மா தானே சொன்ன? நீதான என் நிஜ அம்மா?” என்று கௌதம் கேட்ட கேள்வியால் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, “நான்தான்டா உன் அம்மா! நீ தான் என் உயிர், என் மூச்சு”, என்று வந்தனா கூற, குழந்தை அவளை இறுக்க அணைத்து, சில நிமிடங்களில் கண் வளர்ந்தான். சற்று முன் வீடு வந்த தாத்தா, அவனைத் தன் தோளில் சுமந்து கொண்டு, தன் அறையில் இருந்த ஈஸி சேரில் அமர்ந்து கண் அயர்ந்தார்.
காலம் தன் பயணத்தைத் தொடர்ந்து நடத்தியது. கௌதம் தன் மனதில் பல சமயங்களில் எழும் கேள்விகளையும் எண்ணங்களையும் வந்தனாவுடன் பகிர்வான். அவளுடன் நடத்தும் உரையாடல்கள் அவனுக்கு ஆறுதலைத் தரும். என்றாவது ஒரு நாள் அந்த அம்மாவைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை அவனுள் ஆழமாய் வளர்ந்தது. படிப்புடன், இசையிலும், ஓவியம் தீட்டுவதிலும் அவன் திறமை வளர்ந்தது. அவனுடய 16 ஆம் வயதில் அவன் வந்தனா அம்மாவின் பாதி முகத்தைத் தத்ரூபமாக ஓவியமாகத் தீட்டினான். அந்த ஓவியத்தைப் பார்த்துப் பிரமிப்படைந்த தாத்தா “முழுசா வரையலயாப்பா?” என்று கேட்டார். “மீதிய வரைய அந்த அம்மாவ பார்க்கணும் தாத்தா!”, என்று கூறிய கௌதமை ஆச்சரியத்துடனும், பெருமிதத்துடனும் பார்த்தார்கள் வந்தனாவும், ரகுவும். தாத்தாவின் விழிகளில் நீர் தளும்பியது.
“அம்மா! அம்ம்ம்மாஆஆ! என்ன ஆச்சு?” என்று கேட்டு, ஒரு கிண்டல் பார்வையுடன், “நான் காலேஜ் போய்ட்டு வரேன்மா! டாட்டா!” என்ற கௌதமின் குரலைக் கேட்டு நிலைக்கு வந்தாள் வந்தனா. அவன் பைக்கில் கிளம்பிச்சென்றதும் வாசல் கதவை மூடிவிட்டு ஹாலுக்குள் வந்தனா நுழைந்த போது “ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!” என்ற பாடல் FMல், சின்மயியின் இனிய குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது.
Born in Our Hearts
Gautham was in his room, looking at the sketch of his mother’s half-drawn face.
"Aren’t you getting late for College?" Vandana asked as she entered Gautham’s room. Taking a deep breath, she gently put his right hand into her palm. Just then he realized his mother standing next to him.
“When will I finish this drawing, Amma? Is there a chance at all?” His questions swept back Vandana ten years down the memory lane.
**********
It was the 25th of May …the fury of the blistering Sun was starting to weaken. Vandana woke up earlier than usual and cooked a simple meal. Her mind was wandering like a kite cut from its string. Both Vandana and her husband Raghu had taken off from work that day. Ten-year old Gautham, emerged sleepy-eyed from his grandparents’ bedroom. He ran and hugged his mother tight.
“Good morning, my dear! Brush and shower quickly, okay? I have prepared your favourite Upma for breakfast!”
“On a weekday, Amma?!” Gautham was surprised. With a naughty glint in his eye, he ran to refresh himself.
Vandana’s parents prepared to leave. “We shall leave for the temple now. And after that we will visit your Uncle. You talk to Gautham. Then give us a call. We will come home then.” Raghu handed them an umbrella and saw them off warmly.
After his bath, Gautham looked for his grandparents in their room.
“They have gone to the temple, Gautham. Let’s have breakfast” said Raghu. As he and Gautham sat on the dining chairs, Vandana served them both and then settled herself on a moda stool in front of Gautham. Her eyes were welling up…
Raghu came straight to the point. “What do you think of adoption, Gautham?”
Gautham knitted his eyebrows, thought for a few seconds “There are so many children without a home, without food, without anyone to look after them. I feel so sorry for them. Are we going to adopt, Appa?” His tone was enthusiastic. Vandana was struggling to hold back her tears.
“Come here and sit on my lap” Raghu said. A delighted Gautham rushed and sat on his lap comfortably.
Raghu started “When you were a week-old baby, we brought you home from the hospital…” Gautham looked at his mother with a million questions bursting in his mind. Vandana’s eyes were flooded.
“As soon as you were born, your biological mother, gave you up with a heavy heart at the adoption agency. When your mom and I got married, we had decided to adopt a baby. So, we had registered with this agency. The agency called us and told us about you. They asked us to come and see if we would select you. Your mom told them “There is no question of us choosing the baby. The baby has chosen us! We shall come immediately. How soon can we bring our baby home?” After that, you came home in a week” Raghu finished and hugged Gautham tight.
Gautham gently eased himself out of his dad’s hug, went to his mother, sat on her lap. He touched her cheeks “Why did that Amma leave me, Amma?”
“That was her sad situation. She felt at least you need to have a good life. That is why she took that difficult decision” her voice wavering, an overwhelmed Vandana consoled him.
Vandana and Raghu had been planning over the last few months to tell Gautham about his birth. That day, after they told him the truth, he raised many questions. “Amma, this is all just an imaginary story, right? You are my real mother, isn’t it?” Vandana broke down crying “Yes dear, I am your mother. You are my life; you are everything to me”. Gautham hugged her tight and fell asleep. In a few minutes, his grandfather came home, took Gautham in his arms, and settled on his easy chair.
**********
As the years rolled by, Gautham would share all his brewing thoughts and questions with Vandana. Those honest conversations with her comforted him. He hoped to meet his birth mother someday. As he grew, his strength in academics and talent in music and art grew too.
When he turned 16, he had painted a stunning portrait – It was one-half of Vandana’s face. His grandfather was very much impressed by his art and asked him “You haven’t finished the full face?”. Gautham sweetly replied “I need to see my other Amma to complete the face”. Raghu and Vandana felt a surge of surprise and pride in their hearts.
**********
“Amma, Amma, Ammmmaaaa…what happened? I am leaving for college now. Bye!” Gautham’s teasing voice jolted Vandana back to the present. After he left, Vandana closed the gate and entered the home. The radio was on…. playing a soul-stirring song from a Tamil movie describing the depth of love a mother carries for her adopted child!
**********
----------------------------------------------------------------------------------------------------
Credits :
Translated from Tamizh by Archana Shivamani Rao and Srividya.
From Unknown: To Srividya> Firstly, it's a great idea of Vidya's friend and her family to create artwork and ask talented friends to base a story or poem based on an artwork of their choice. Lalitha and I enjoyed Vidya's short story very much. Her Tamil is superb. I'm not a Tamil scholar by any means to judge someone's work. But, as a layperson who loves Tamil, I enjoy reading Tamil writings which flow with elegance. Vidya's writing is so elegant and deeply moving. No one could have done a greater honour to the artwork she had chosen. We are not ashamed to admit that our eyes were wet with tears by the time we came to the end of the story. The story had all the elements of a gripping read - love, suspense, realism, relevance, and noble ideals. Please convey our hearties congratulations to Vidya. If this is her maiden attempt, she has scored a triple century on debut! I tremble with excitement at the thought of reading her writings to come.
ReplyDeleteUnique thought and imagination 👏👏
ReplyDelete